அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல்.!
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் லாலன் (Verinag forests ) வெரினாக் காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தின் 02 பாரா மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் வெரினாக் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், இந்திய இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், இது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.