தீவிரவாதிகள் நமது எதிரிகள்… நண்பர்கள் அல்ல – ஆளுநர் ஆர்.என்.ரவி

Default Image

நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு காவல்துறை இந்தியாவிலேயே மிகச்சிறந்த அமைப்பு.

தீவிரவாதிகள் நமது எதிரிகள். நண்பர்கள் அல்ல; சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் போலீசார் சிறப்பாக பணியாற்றி வெடி பொருட்களை கைப்பற்றியதோடு, சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்தனர்.

கோவை பயங்கரவாத தாக்குதலில் அவர்கள் நேரடியாக NIA வை அழைத்து விசாரிக்க சொல்ல முடியாது. ஆனால், முடிவு எடுக்க வேண்டியவர்கள் 4 நாட்கள் காலம் தாழ்த்தி வழக்கை NIAவுக்கு அனுப்பினார்கள்.

கோவையில் நடந்தது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல். இதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடமுடியாது. இந்த வழக்கை 4 நாட்கள் கழித்து NIA விடம் தமிழ்நாடு காவல்துறை ஒப்படைத்தது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மமே இந்த பாரதத்தின் அடையாளம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்