நூற்பாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு முட்டைகள் சேதம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் பஞ்சாயத்து சி.ஆர் காலனியை சேர்ந்தவர் சிவன் இவருடைய மனைவி கலைவாணி இவருக்கு சொந்த ஊர் நூற்பாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த நூற்பாலையில் 19 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது நூற்பாலையில் உள்ள பஞ்சு மூட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஓடினர் .
மேலும் சிறிது நேரத்தில் நூற்பாலை முழுவதும் தீ மளமளவென பரவியது மேலும் இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே தீயணைப்பு அலுவலர் முத்து என்பவர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் பாளையில் உள்ள சுவரை இடித்து அகற்றி பஞ்சு மூட்டைகளை அகற்றப்பட்டனர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…