தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

Default Image

ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஓபிஎஸ் அறிக்கை.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் நேற்று மாலை 6 மணியளவில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். காயமடைந்த போலீசாரின் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்யை தினம் ஸ்ரீநகரில் காவல் துறை பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர்.

14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். இந்தியாவில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்