அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டுள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

street dogs

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த ஆண்டு (2025 ஏப்ரல் 1) நிலவரப்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் வரை) மட்டும் 1.24 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ள தாக ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டு இருக்கிறது.

இதனையடுத்து, இந்த மாதிரியான சம்பவங்களுக்கு தீர்வு வேண்டும் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டது மட்டுமில்லாமல் ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேர் தெருநாய்களால் கடிபட்டுள்ளனர். 2024-ல் மட்டும் 4.25 லட்சம் பேர் கடிபட்டு, 82 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள நாய்களை அடையாளம் கண்டு, மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்ய வேண்டும்.

இது மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ஐ மீறுவதாக இருக்கலாம் என செய்தியாளர் கேள்வி எழுப்ப அதற்கு, “மக்களின் உயிரை விட எதுவும் முக்கியமில்லை. சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அரசு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி பதில் அளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஊட்டி, மதுரை போன்ற இடங்களில் செயல்படும் நடமாடும் ஸ்டெரிலைசேஷன் (mobile sterilization) திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.

ஆபத்து இல்லாத நாய்களை தத்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் , மக்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து தெருநாய்க்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு நாளும் நாய்க்கடி நிகழ்வு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவை” எனவும் அன்புமணி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்