திருப்பூரில் பனியன் சந்தையில் பயங்கர தீவிபத்து… பொருட்கள் எறிந்து நாசம்.!
திருப்பூரில் இயங்கிவரும் பனியன் சந்தையில் தீவிபத்து ஏற்பட்டதில் கோடிக்கணக்கான பொருட்கள் எறிந்து நாசம்.
திருப்பூரில் உள்ள காதர்பேட்டை பகுதியில் இயங்கிவரும் பனியன் சந்தையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீ அனைத்து கடைகளுக்கும் வேகமாகப் பரவியது. இந்த பனியன் சந்தையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் தாற்காலிகமாகப் போடப்பட்டு விற்பனை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடைகள் எறிந்து கோடிக்கணக்கான பொருட்களும் எறிந்து நாசமாகியுள்ளன.