பயங்கரம்…டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து..! 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

Default Image

கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு : கிருஷ்ணகிரி மாவட்டம் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து காவேரி பட்டினம் அருகே உள்ள எர்ரஹள்ளி பகுதியில் நடந்துள்ளது.

காவேரிப்பட்டினம் அருகே எர்ரஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் முத்து, மல்லி, முத்துசாமி, வசந்தி மற்றும் 3 மாத குழந்தை வர்ஷினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்