தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.நேற்று கடைசி நாள் ஆகும்.
இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்துவருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தபட்டது.
அதேபோல் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.காரணம் என்னவென்றால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது,அவரது கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் நிறுத்திவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…
சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு…