தூத்துக்குடியில் திடீரென நிறுத்தப்பட்ட கனிமொழி,தமிழிசையின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை

Default Image

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென  நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்   நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.நேற்று கடைசி நாள் ஆகும்.

இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்துவருகிறது.

Image result for KANIMOLHI TAMILISAI

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென  நிறுத்தி வைக்கப்பட்டது.

திமுக வேட்பாளர்  கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தபட்டது.

அதேபோல் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.காரணம் என்னவென்றால் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது,அவரது கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் நிறுத்திவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்