இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் அனைத்து கடைகளும் , திரையரங்கம் , சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாததால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.அதில் ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போனதால் தேர்வு எழுத துடித்துக்கொண்டு இருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாடவேண்டிய இளம்பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி முடங்கி கிடக்கின்றனர்.
இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு ரத்து குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என விளக்கம் அளித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…