குழந்தைகளிடம் தீண்டாமை.! சாதிய பாகுபாடு பள்ளிக்கூடத்தில் இல்லை.! ஆதி திராவிடர் நல அலுவலர்.!
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரோ, மற்றவர்களோ பள்ளியில் எந்த பாகுபாடும் இருப்பதாக புகார் தெரிவிக்கவில்லை. -பஞ்சாக்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பெரியார் பிறந்தநாளன்று வெளியான தென்காசி, பஞ்சகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடம் கடை உரிமையாளர் தின்பண்டம் தர மறுத்து சாதிய தீண்டாமை காட்டிய வீடியோ தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, மகேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சி மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, ஆதிராவிடர் நல அலுவலர் ,’ பாஞ்சாங்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களிடம் விசாரணை நடத்தியதினோம். அப்போது, பள்ளியில் சாதி பாகுபாடு தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரோ, மற்றவர்களோ பள்ளியில் எந்த பாகுபாடும் இருப்பதாக புகார் தெரிவிக்கவில்லை.
பள்ளி குழந்தைகளுக்கு சாதி பாகுபாடு பார்த்து உணவு வழங்கப்படுவதில்லை. அனைத்து குழந்தைகளையும் ஒன்றாக உட்கார வைத்து உணவு வழங்குகிறோம் என அப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் தெரிவித்தார். இதனை வைத்து கொண்டு பார்க்கையில், பள்ளியில் சாதி பாகுபாடு இருப்பதாக வெளியான தகவல் உண்மைஇல்லை என ஆதிதிராவிட நல அலுவலர் கூறியுள்ளார்.