பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை.! குற்றவாளிகளுக்கு 6 மாதம் தடை.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை கடைபிடித்த வழக்கில், குற்றவாளிகளுக்கு 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை என நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க செல்கின்றனர்.
அப்போது அந்த கடைக்காரர், உங்களுக்கு மிட்டாய் கொடுக்க கொடுக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு போட்டிருக்கு என கூறி அனுப்பிவிடுகிறார். பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை கடைபிடித்த, அந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது .
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும், கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமசந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அதே ஊரை சேர்ந்த முருகன், குமார் , சுதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில், குற்றாவளிகள் 5 பெரும் 6 மாத காலம் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.