வருடக்கணக்கில் போலீசார் திணறிய திருட்டு சம்பவம்.! வாட்சாப் மூலம் வசமாக சிக்கிய திருடி.!
தென்காசியில் 2019ஆம் ஆண்டு திருடப்பட்ட நகைகளை அணிந்து, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பணிப்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார்.
தென்காசியில் சிவந்தி நகர் பகுதியில் பங்கஜவள்ளி எனும் ஓய்வுபெற்ற ஆசிரியை தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2019ஆண்டு ஓர் திருட்டு நடைபெற்றுள்ளது.
அந்த திருட்டு சம்பவத்தில் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. அப்போதே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தடையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கண்டறிய முடியவில்லை.
வருடங்கள் கடந்த பிறகு அண்மையில், பங்கஜ வள்ளி தனது போனில் வாட்சாப் செயலியில் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது ஓர் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அதில் திருட்டு நடைபெற்ற சமயத்தில் வீட்டில் பணிபெண்ணாக வேலை பார்த்த மாப்பிளை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மனைவி ஈஸ்வரி என்பவரது தனது போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அந்த ஸ்டேட்டஸில் திருடப்பட்ட நகைகள் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பங்கஜவள்ளி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே நடவடிக்கை எடுத்த போலீசார் ஈஸ்வரியை கைது செய்து அவரிடம் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.