தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8000 காலி பணியிடங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
தமிழக மின்சாரத்துறையில் காலியாக உள்ள கள உதவிப்பணியாளர் பணிகளில் முதற்கட்டமாக 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறையான டான்ஜெட்கோவில் காலியாக பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு மின்சார துறை காலிப்பணியிடங்க்ளில் 900 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன. 2500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கள உதவி பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அப்படியே இருக்கிறது என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்து.
இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கூறுகையில், ‘ 2016ஆம் ஆண்டு தேர்வானவர்களை 2021ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களில் நிரப்ப முடியாது. அதே போல 29000 கள உதவிபணியாளர்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. ‘
அதில் முதற்கட்டமாக 8 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதில் கேங்க்மேன்களை உதவி களப்பணியாளர்களாக வேலைபார்க்க வைக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுளது. உதவி களப்பணியாளர்கள் காலிப்பணியிடம் தற்காலிகமானது. தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.