டெண்டர் முறைகேடு ! அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

- அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும், மனுவுக்கு பதிலளிக்கவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் அமைச்சரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025