டெண்டர் முறைகேடு குற்றசாட்டுகளில் முழுமையாக விடுவிக்க முடியாது.! எஸ்.பி.வேலுமணிக்கு நீதிமன்றம் உத்தரவு.
டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டலும், புதிய வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், குற்றச்சாட்டுகளில் இருந்து முழுதாக எஸ்.பி.வேலுமணியை விடுவித்து விட முடியாது. – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து.
கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு அரசு சார்பில் டெண்டர் கோரப்படத்தில், முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி.வேலுமணி தரப்பில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த நீதிபதிகள் முன்னிலையில், ‘ ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை .’ எனவும் , ‘ முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டது. வழக்கு பதிய அனுமதி பெறவில்லை.’ எனவும் எஸ்பி வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் பின்னர் நீதிபதி அமர்வு, ‘ முறையாக விசாரணை நடத்தாமல் வழக்கு பதியப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும், ஏன் அவசர அவசரமாக வழக்கு பதிய வேண்டும்.? ‘ என கேள்வி எழுப்பினர்.
மேலும், ‘ இந்த வழக்கு இப்பொது ரத்து செய்யப்பட்டலும், புதிய வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், குற்றச்சாட்டுகளில் இருந்து முழுதாக எஸ்.பி.வேலுமணியை விடுவித்து விட முடியாது.’ என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் அளித்து இந்த வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்.