பத்தாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும்.. ரூ.35,000 கோடி ஒதுக்கீடு!

womens self help groups

தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்று பேரவையில் பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தமிழ்நாட்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது, 1989ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் விதைக்கப்பட்ட சுய உதவி குழு திட்டம் இன்று நாடெங்கும் கோடிக்கணக்கான மகளிர் வாழ்க்கையில் ஒளியேற்றும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா..? மெட்ரோ.. வடசென்னை.. பூந்தமல்லி..

மகளிரிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி சமூகத்தில் பெண்களுக்கு உரிய பங்களிப்பினை வழங்கும் நோக்கில் அவர்களின் வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்தவகையில் இதுவரை சுய உதவி குழு இயக்கத்தில் இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ்  உறுப்பினர்களை கொண்டு 10,000 புதிய சுய உதவி குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வரும் நிதியாண்டில் ரூ.35,000 கோடி அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, வேளாண்மை, சிறு குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இது கடந்த ஆண்டை விட 14% அதிகம் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்