யுவராஜுக்கு என்ன தண்டனை? – நீதிமன்றம் இன்று அறிவிப்பு!

Published by
Edison

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2019 மே 5 முதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 116 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி  மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்து 8ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் 2 பேர் இறந்த நிலையில், 5 பேரை விடுதலை செய்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு வழங்கினார்.மீதமுள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்,கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டவுள்ளது. அதன்படி,யுவராஜ்,யுவராஜ் கார் ஓட்டுநர் அருண்,குமார் என்கிற சிவக்குமார் உள்ளிட்டோருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க உள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

1 hour ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

2 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

4 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago