பொங்கல் வாழ்த்து தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்..!
மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும்.#HappyPongal pic.twitter.com/STtCx59fCX
— Vijayakant (@iVijayakant) January 12, 2022