அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து பயணிப்பதாகவே தெரிவித்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லம் முன்இருந்த தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்,கொரோனா காலத்தில் மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்திய போது தனித்து போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும் எனவும், வருகின்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியா..? அல்லது தனித்து போட்டியிடுமா..? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.மேலும் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் விருப்பப்படுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை .அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…