நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்!!!திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!!!

Published by
Venu
  • 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்:
  • ஜனவரி  22-ஆம்  தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்
  • ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க  அரசாணை
  • தற்காலிக ஆசிரியர்களுக்கு  ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
  • நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்  என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 ஜனவரி  22-ஆம்  தேதி  முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:

எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்  ஜனவரி  22-ஆம்  தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு  செய்தது.ஜனவரி  22-ஆம்  தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.நான்கு  நாளாக தொடர்ந்து போராட்டம்  நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க  அரசாணை : 

பள்ளி கல்வித்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க  அரசாணை  வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு விதி 17B-யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று  பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.

Image result for தற்காலிக ஆசியர்கள்

அதேபோல்  ரூ.7500 ரூபாய்  ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு  ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை:

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ஆம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:

இந்நிலையில் மீண்டும் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம்.நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 28ம் தேதிக்கு பின்னர் பணிக்குவருபவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற இயலாது . காலியாக இருக்கும் இடத்தில்தான்அவர்கள் பணியில் சேர வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Published by
Venu

Recent Posts

திடீரென உயர தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…

15 minutes ago

36 மணிநேரம் ஒரே இடத்தில்., மிக கனமழை! தனியார் வானிலை ஆர்வலர் அப்டேட்!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…

32 minutes ago

4 நாட்கள் அரசு முறை பயணம்! தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…

1 hour ago

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பைடன்! போர்நிறுத்த ஒப்பந்த விவரங்கள் இதோ…

வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…

1 hour ago

கனமழை எதிரொலி : பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில்…

2 hours ago

சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது – பிரதீப் ஜான் கணிப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…

3 hours ago