25 ஆவின் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை!
ஆவினில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை.
நோட்டீஸ் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஆவினின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில், பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து தேர்வு நடைமுறைகளையும் பின்பற்றி நியமிக்கப்பட்ட பின் எந்த நோட்டீசும் கொடுக்காமல் பணிநீக்கம் என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.