கோயில்கள் சேதம் -பாஜக மாநிலத்தலைவர் முருகன் வேதனை
கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மன வேதனையை அளிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில் மாகாளியம்மன் கோவில், விநாயகர் கோவில், சங்கமேஸ்வரர் கோவில், செல்வ விநாயகர் கோவில் என நான்கு கோவில்கள் முன்பாக டயர்களை எரித்து நாச வேலை செய்தது, எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.இந்து வழிபாட்டுத்தலங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இந்து மக்களின்,தமிழகத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளின் மீது நடைபெறும்தாக்குதலாகவே கருதுகிறேன்.
கோவில்களுக்கு மக்கள் இறை வழிபாட்டிற்கு வருவதை தடுத்திட அல்லது அச்சத்தை ஏற்படுத்திட இவை நடைபெற்றதா ? இல்லையென்றால் கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்துவோம் ,தமிழ் கடவுள் முருகனை அவமதிப்போம் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவப்போக்கா ? எப்படி என்றாலும் , இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் .போலி மதச்ச்சார்பின்மை பேசி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.தக்க சமயத்தில் அவர்களுக்கு மக்களே தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் .
கோயம்புத்தூரில் மாகாளியம்மன் கோவில், விநாயகர் கோவில், சங்கமேஸ்வரர் கோவில், செல்வ விநாயகர் கோவில் என நான்கு கோவில்கள் முன்பாக டயர்களை எரித்து நாச வேலை செய்தது, எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது! pic.twitter.com/K7S9xSmENU
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 20, 2020