கோயில் நிலங்களை வீடு இல்லாதவர்களுக்கு வழங்க கூடாது – ஹெச்.ராஜா

Default Image

சென்னை தியாரகராய நகர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,
கோயில் நிலங்களை வீடு இல்லாதவர்களுக்கு வழங்க கூடாது என்றும், கோயில் நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல என கூறினார். பின்னர் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு வழங்கும் சம்பளம் வீண் செலவு என விமர்சித்த அவர், இந்து கோயில்களை பாதுகாக்க முடியாத போது, எதற்கு அறநிலையத்துறை? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இக்கூட்டத்தில் பொன் ராதாகிருஷ்ண, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்