தமிழகத்தில் உள்ள கோவில் நில விபரங்கள் இணையத்தில் வெளியீடு …!
- கோவில் நில விபரங்கள் இணையத்தில் வெளியீடு.
- முதற்கட்டமாக 3 லட்சத்து 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அத்துடன் கோயில் நிலங்கள், கட்டிடங்கள், விவரங்களை மக்கள் பார்வையிடும் வண்ணம் இணையத்தில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் நில விவரங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நில விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3 லட்சத்து 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.