தைப்பூச நாளில் கோயில் தேர் சரிந்து விழுந்து விபத்து.!
ஈரோடு மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நடந்த திருவிழாவில் தேர் சரிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் செய்து வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் உள்ள சத்தியமங்கலம் அருகே கொண்டயம்பாளையத்தில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றபோது, வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விழுந்தது.
தைப்பூச திருவிழா.! அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!
தேர் கவிழ்வதை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த சிறிய விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி தப்பினர். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தமிழ் கடவுள் முருகனை சாந்தப்படுத்த சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.