அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்..!
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலானது தொடங்கியது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பச் சலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில், ஈரோடு, சேலம் தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் ல் மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.