இந்த 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை உயரும்..வானிலை மையம்..!
8 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடைக் காலம் நெருங்கி வரும் நிலையில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.