தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தர்மபுரி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களில் நிலவிய வெப்ப நிலையைக் காட்டிலும் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.