நேரடியாக வர சொல்லுங்கள்., அவர்கள் முகமூடியை கிழிக்கிறோம் நாங்கள் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு, இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, அதிமுக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக 2-ம் கட்ட புகார் பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அமைச்சர் பேசுகையில், நேரடியாக வர சொல்லுங்கள், விவாதத்தை நடத்த சொல்லுங்கள், முகமூடியை கிழிக்கிறோம் நாங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு எங்கள் மடியில் கனம் ஒன்றுமில்லை என்பதுனாலதான் வழியில் பயமில்லை என்ற அடிப்படையில் நாங்கள் நேருக்கு நேருக்கு திமுகவை விவாதம் நடத்த வர சொல்கிறோம். நேருக்கு நேர் வர தைரியம் இல்லாதவர்கள், ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி, விளம்பரம் நோக்கம் என்றும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என்பது அந்த காலம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025