குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை
குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன். தெலங்கானா ராஜ்பவனை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன்.மக்கள் தான் எல்லாம்.
எப்போதும் கர்வம் தலைக்கேறாமல் இருப்பேன்.மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை .மருத்துவர் என்ற கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டு தான் பாஜக தொண்டராக கமலாலயத்துக்குள் நுழைந்தேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.