சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட அதிவேக தேஜஸ் ரயிலை பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடக்கி வைத்தார்.
இந்த அதிவேக தேஜஸ் ரயில் 13 பெட்டிகள் கொண்டது.அதில் 57 பேர் பயணம் செய்யும் உயர்தர குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டியும், 78 பேர் பயணம் செய்யும் 12 குளிர்சாதனப் பெட்டிகளும் உள்ளது.இந்த பெட்டிகளில் இருக்கையில் பின் புறம் டிவி உள்ளது.மேலும் மொபைல் சார்ஜர் செய்யும் வசதியும் உள்ளது.
வாரத்தில் வியாழன் கிழமை தவிர மற்ற நாட்களில் மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும் .சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.30 மணிக்கு வந்தடையும்.
இந்நிலையில் இந்த ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.மேலும் கூடுதல் வருவாய் கிடப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.தேஜஸ் ரயில் மார்ச் 2 முதல் ஜூன் 27-ம் தேதி வரை அதாவது கடந்த மூன்று மாதங்களாக 10 லட்சத்து 21ஆயிரத்து 76 பேர் பயணித்ததன் மூலம் ரூ.17.8 கோடி வருவாய் கிடைத்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…