சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து, இந்திய அரசு 21வரும் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்களும் சிறுவர்களும், அதே பகுதியில் உள்ள கண்மாயில் 15 பேர் கொண்ட கும்பலாகச் சென்று குளித்து கும்மாளம் போட்டுள்ளனர். அப்போது கொரோனாவைக் கிண்டல் செய்து டிக்டாக்கிலும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் கும்மாளம் போட்ட கண்மாயிலேயே, மீன்பிடித்து, மிளாகாய் தூள் தடவி வைத்து, சுவையாக கூட்டாஞ்சோறு கறிவிருந்து சமைத்து சாப்பிட்டுள்ளார்கள். ஒரு சிறுவன் சாமி வந்ததுபோல் நடிப்பதையும் அவனிடம் கொரோனா எப்போது ஒழியும் என்று குறிகேட்பது போலவும், அவர் இன்னும் 10 நாள் தான் பொறுத்துக்கோ என்று ஆவேசமாகச் சொல்வதுமாக டிக்டாக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த டிக்டாக் வீடியோவை அவர்களே இணையத்தில் பரப்பிவிட்ட நிலையில், இந்த வீடியோ காவலர்களின் கண்களில் பட, அந்த 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை 100 தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர்.
இந்த 15 பேரில் 11 பேர் பள்ளி சிறுவர்கள் என்பதால் அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மீதமுள்ள 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…