“YouTube” பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது!
யூடியூப் பார்த்து குக்கரில் கள்ள சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் இன்று வரையிலும் குறைந்த பாடில்லை. எனவே, இந்தியா முழுவதிலும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அணைத்து இடங்களும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
இத்துடன் சேர்த்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. எனவே பல குடிகாரர்கள் மது கிடைக்காமல் இறந்துமுள்ளனர், தாங்களாகவே எதையாவது போதைக்காக குடித்து அவதிப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் சாராயம் வாங்குவது போன்று சென்று விசாரித்ததில் பலரும் வீடுகளில் காய்ச்சுவது தெரியவந்துள்ளது.
அதுவும் இருவர் யூடியூப் பார்த்து கள்ளச்சாராயம் வீட்டில் உள்ள குக்கரில் காய்ச்சி வந்தது தெரியவந்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இதுவரை 522 பேருக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.