காதலனை கரம்பிடிக்க இளம்பெண் நாடகம்.! பிரம்பால் சரமாரியாக அடித்து விரட்டிய திருநங்கை.!
- காதலனை திருமணம் செய்ய பேய் பிடித்தது போல் நடித்த இளமைப்பெண்.
- அருள்வாக்கு கூறி வரும் திருநங்கை ஒருவர் பேயை விரட்டுவதாக கூறி பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.
காதலனை திருமணம் செய்ய பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை அருள்வாக்கு கூறுவதாகக் கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் அடித்த காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் தனது காதலனை கரம் பிடிப்பதற்காக தனக்கு பேய் பிடித்தது போல் நாடகமாடி உள்ளார் அந்த இளம்பெண்.
இந்நிலையில், அந்த பெண் பேய் பிடித்தது போல் நடித்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்த பெண்ணை கன்னங்குறிச்சில் உள்ள மதுர காளியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கோவிலில் அருள்வாக்கு கூறி வரும் திருநங்கை ஒருவர் பேயை விரட்டுவதாக கூறி பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அந்தப் பெண் நாடகமாடியதை பிரம்பு அடி தாங்கமுடியாமல் ஒப்புக்கொண்டார். பின்பு அதோடு நிறுத்தாத திருநங்கை கதறி அழுது கொண்டிருந்த அந்த பெண்ணிடம் காதலனை மறந்து ஆகவேண்டும் என தந்தை தாய் மீது சத்தியம் வாங்கியுள்ளார். நடிப்பை விரட்டிய திருநங்கை, காதலையும் சேர்த்து விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.