ஸ்விக்கியில் டெலிவரி வேலை செய்வது போல கஞ்சா விற்பனை செய்த இளம்பெண் கைது!

ஸ்விக்கி உணவு நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்வதுபோல சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கத்தினை சேர்ந்த வனிதா எனும் 32 வயதான இளம்பெண் கோயம்பேட்டில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, கிண்டி பகுதியில் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்வதுபோல தன்னை காட்டிக் கொண்டு வீடுவீடாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து வனிதாவை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் 500 ரூபாய் பணம் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025