நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது .
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தான் நேற்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதற்கு பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் கூறினார்.
இதற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.நாங்குநேரிக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமையில் 4பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…