சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.7-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
பின்னர் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், சிறையில் இருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொள்கிறது .பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திதீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் . அரசின் நிலைப்பாட்டால் தான் போராட்டம் தொடர்கிறது என்று ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ,சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் . பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர்.சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 2000 பேர் காத்து இருக்கின்றனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…