ஆசிரியர்கள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்- தமிழக அரசு எச்சரிக்கை

Default Image

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆசிரியர்கள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே  ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.7-வது  நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் தலைமைச்செயலக அரசு பணியாளர்கள் சங்கத்தின் தொடர் வேலைநிறுத்தம் என்று  அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆசிரியர்கள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்