மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சஞ்சய் என்பவர் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதே பள்ளியை சேர்ந்த மாறி என்ற மாணவனிடம் செய்முறை வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவன் ஆசிரியை முன்பதாக தரையில் பாய் போட்டு படுத்துளார். இதனை தட்டி கேட்டபோது அவரை தாக்க முயன்றுள்ளார். இந்த செயலை சக மாணவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதனையடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி பள்ளி தலைமையாசிரியர் முன்பு மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின், மாணவன் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், ‘மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து திருத்த வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…