“ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்“ – விஜயகாந்த் வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பனி நிரந்தரம் செய்யக்கோரி 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றுள்ளார்.
எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.