ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்….!!
அரசு ஊழியர்கள், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற, சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், அரசு ஊழியர்கள், அரசின் நிதி சூழநிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கோட்பாட்டின்படி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சசிகலா, தினகரன் சார்ந்தவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கும் இந்த நிலை பொருந்தும் என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.