ஆசிரியர் தினம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து!

Default Image

ஆசிரியர் தினத்தையொட்டி ஆசியர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்.

நாடு முழுவதும் நாளை ஆசிரியர் தினம்  கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கல்விப்பணியை ஈடுபாட்டோடு செய்யும் ஆசிரியர்கள் சமுதாயம் எனும் கடலின் கலங்கரை விளக்கங்கள். ஆசிரியர் பணி என்பது கல்வியை புகட்டுவது மட்டுமன்று மனிதர்களை மனிதர்களாக உருவாக்குவதாகும்.

கைதேர்ந்த சிற்பிகளால் தான் கல்லையும், சிலையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையை கல்வியறிவு என்னும் சுத்தியால் செம்மைப்படுத்தி அறிவுள்ள செய்திகளை புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாக உருவாக்குகிறார்கள். அனைத்து ஆசிரிய பெருமக்களையும் ஆசிரியர் தின நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்