கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா பரவலால் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிருவனங்களும் மூடப்பட்டுள்ளன.இதனால்,கல்லூரி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றனர்.
ஆனால்,தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மட்டும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம். பள்ளிகளுக்கு மாணவர்கள் வராதபோது ஆசிரியர்கள் வருவது தேவையற்றது.
எனவே,கொரோனா 2 வது அலையின் பரவல்,கோடை வெயிலின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,ஆசிரியர்களை வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியாக பாடம் நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்”,என்று சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…