நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர்…..!!! 2பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!!
நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் டவுன் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் மேசையை தட்டி விட்டதாக கூறியுள்ளார். அப்போது வகுப்பில் உள்ள ஆசிரியர் ஜோசப் செல்வின் அந்த மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது.
தன்னுடன் பயிலும் சகா மாணவர்கள் முன்பு அடித்ததால் மனமுடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் ஜோசப் செல்வின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.