மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று ஆறுதல் கூறும் ஆசிரியர்! முதல்வர் பாராட்டு
மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று ஆறுதல் கூறும் ஆசிரியர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்கள், ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ள நிலையில் இதனை தடுக்க, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று அறிவுரை வழங்கியுள்ளார்.
இவரது இந்த செயலை பாராட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறக்காத இந்நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகளையும், மன அழுத்தம் தவிர்க்க ஆறுதலும் கூறி, பெற்றோர்களிடமும் அறிவுறுத்தி வரும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது. pic.twitter.com/Iw7RAJrea5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 30, 2020