“அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர்;மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்! !
கோவையில் தனியார் பள்ளி மாணவி பொன்தாரணி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக பொன்தாரணி என்ற மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நேற்று முன்தினம் சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்,பல்வேறு அமைப்புகள்,மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து,தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதனை தொடர்ந்து,பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அப்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில்,பெங்களூரில், தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் தற்கொலை தொடர்பாக கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இதில் சம்மந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில்,அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கோவையில் தனியார் பள்ளி மாணவி பொன்தாரணி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்ற துயர செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது, மாணவ-மாணவிகளுக்கு இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு,அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி பொன்தாரணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
அறம் தவறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி பொன்தாரணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். (2/2)#justiceforpontharani
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 14, 2021