3 ம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியை – பெற்றோர் வாக்குவாதம்!
3 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை கணக்கு பாடம் சரியாக செய்யாததால் ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவர் சூர்யபிரகாஷ் . அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அந்த பள்ளியில் 3 ம் வகுப்பு ஆசிரியராக இருப்பவர் உஷா . நேற்று மாணவர் சூர்யபிரகாஷ் கணக்கு பாடம் சரியாக செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆசிரியர் உஷா மாணவரை பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். முதுகில் காயங்களுடன் தடம் பதிந்துள்ளது.
வீட்டிற்கு சென்றதும் இதை கண்ட பெற்றோர்கள் மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆசிரியர் இடமாற்றம் செய்யும் வரை மாணவரை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் விசாரணைநடத்தி வருகிறார்.