ஆசிரியர் ரமணி குத்திக் கொலை : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!

ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Anbil Mahesh

தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியை ரமணியை பெண் கேட்டு சென்ற போது, விருப்பம் இல்லை என கூறியதால் ஆத்திரம் தாங்காத மதன் கொலை செய்ததாக முதற்கட்ட தகவலின்படி கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்”, என அன்பில் மகேஷ் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பத்திரிகையளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘விரைவாக தஞ்சையில் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதாகவும், இந்த தாக்குதலை நடத்திய நபருக்கு தக்க தண்டனை கிடைக்கும்’ எனவும் கூறியிருந்தார். மேலும், ஆசிரியர் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்