மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார்.
பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் மேலாடை இல்லாமல் துண்டு மட்டும் அணிந்துகொண்டு வருவது, ஆபாச வலைத்தள இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற பல குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, இன்று காவல் துறை ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு முன்பே தன் தொலைபேசியில் இருந்த பல தரவுகளை அளித்ததாகவும், தொலைபேசியில் அளிக்கப்பட்டதை தரவுகளை மீட்க தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ராஜகோபாலன் தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும், மாணவிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…